வியாழன், 30 அக்டோபர், 2014

உடைந்துபோன நிலாச்சில்லுகள்...

வில்லும் அம்பும் 
ராம அர்ச்சுனனுக்கு 
==அவளுக்கு கூர்விழி. 

=*=*=*

காண்பதற்கு அழகு 
கரடுமுரடான தூரத்து கிரகம் 
==ஜன்னல் சிறையில் நிலவு. 

=*=*=*

நீண்டிருக்கும் நைல்நதி 
கறுத்திருக்கும் கார்மேகம் 
==காதலிக் கூந்தல். 


=*=*=*

விடியாத உலகம் 
வியாக்கியானத் தவளைகள் 
==பாசிபடிந்த பழைய கிணறு. 


=*=*=*

வைகறை பொழுது 
வாகை மரத்தடி 
==உடைந்துபோன நிலாச்சில்லுகள் 


=*=*=*


எந்த காக்கைக்கூட்டில் 
விளக்கொளியாகியதோ 
==அவளின் வெட்டப்பட்ட நகம். 


-------------நிலாசூரியன்.