செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

தருவி

 
''தருவி'' - பெயர் விளக்கம் அல்லது சொற்பொருள்.

த்+அ=த

(த)- குபேரன், பிரம்மன், நான்முகன்.

(தரு)- மரம், கற்பகமரம், இசைப்பாட்டு, ஒருவகை சந்தம்.

(வி)- அதிகம், விசை, அறிவு, கண், இன்மை, பறவை, நிச்சயம், அழகு, முகாந்திரம் வித்தியாசம், ஆகாயம், காற்று, திசை.

தருவி - துடுப்பு.
துன்பக்கடலிலோ, ஆழ்கடலிலோ தத்தளித்து தவிப்பவர்களை கரைசேர்ப்பவன் தருவி, (கரைசேர்ப்பது துடுப்பு).

தான் விரும்பக்கூடிய எந்த ஒரு அரியவகை பொருளையும் தருவித்து அடைந்துவிடும் ஆற்றலும், எந்த ஒரு அரியவகை செயலையும் எளிதில் செய்துவிடும் திறமையும் தருவி என்ற சொல்லிற்கும் பெயரிற்கும் உண்டு.

மரம்போல் பலனை எதிர்பாராமல் மற்றவர்களுக்கு ஈந்து உதவும் வள்ளல் குணம் (தரு)வி- என்ற சொல்லிற்கும் பெயரிற்கும் உண்டு.

--------நிலாசூரியன், தச்சூர்.

வியாழன், 30 ஜூன், 2016


வள்ளுவ வாழ்த்து!!!
உலகத்தை இரண்டடியில் உரைத்தவனே உத்தமனே 
மூலறிந்த நாயகனே போற்றி - செந் 
தமிழுக்குத் தனிச்சிறப்பை தந்தவனே தவத்தவனே 
அமுதவனே அருந்தவனே போற்றி 

தரணியிலே யாவருக்கும் சமத்துவத்தை போதித்த 
பரணியே பாவலனே போற்றி - மனித 
வாழ்விற்கு இலக்கணத்தை வகுத்திட்ட வாலறிவா 
ஏழ்மைக்கும் ஏடளித்தாய் போற்றி 

குறள்வெண்பா கொடையீந்த குறைவில்லா அறிவீந்த 
பரல்வெண்பா சிம்பொனியே போற்றி - கண் 
காணயேங்கும் கருத்தவனே காரீந்த கருணையனே 
அண்டவனே அதிபரனே போற்றி 

பிறப்பொக்கும் எனமுழங்கி சாதிமத இழிவிழுங்கி 
முற்போக்கில் மூத்தவனே போற்றி - முக்காலம் 
கணித்தவனே எழுசீரில் உயர்ந்தவனேத் தமிழ் 
முனியே மூப்பனே போற்றி போற்றி...! 


-------------------நிலாசூரியன். தச்சூர்